நிலா
நிலாச் சோறு நிலாப் பாட்டென்று
குழந்தைக்கு உணவூட்ட அன்புத் தாயொருத்தி
அரை டஜன் கதைகளை அலட்சியமாய் எறிந்தாள் ..!
கடற்கரை மணலில்
கிடந்த காதலர்களில் நனைந்த பாதங்களில்
நடுவே மௌன சாட்சியாய் கரைந்தாய் !
தூங்கா இரவுகளில்
அடர்ந்த காட்டின் வளைந்து நெளிந்த
பாதைகள், உன் ஒளி பற்றிக் கொண்டன !
வெறுத்தே விடுவார்கள்
என பயந்தோடி பல காலம் தவம் புரிந்து
தேவதைகள் , உன் நிறம் பற்றிக் கொண்டன !
ஆயிரம் பெண்களை
உன்னோடு ஒப்பிட்டு அசாதாரணமாய்ப் பொய்த்த
கவிஞர்களை சாதரணமாய் மன்னித்தாய் !
அரை குறை ஆடையிலும் அழகாய் ஒளிர்ந்தாய் !!
அன்புடன் ,
தீபு !