முடிவுரை காணாது தொடரும் நம் நட்பு!!!...

நட்பின் முகவரி
தேடித் திரிந்த நாட்கள் பல...
அதைக் கண்டு கொண்டேன் இன்று...
உன் பெயரின் வடிவில்!!!...

முகவரி தந்த முதல்வனே!!!...
நட்பென்ற அத்தியாயத்தில்
முகவரியாய் தோன்றும்
உந்தன் முகம் மட்டுமே!!!...

என் வாழ்க்கைப் புத்தகத்தின்
முன்னுரை நீயே!!!...
முடிவுரை காணாது தொடரும் நம் நட்பு!!!...

-நிலா தோழி...

எழுதியவர் : நிலா தோழி... (19-Jan-12, 5:11 pm)
பார்வை : 650

மேலே