நட்பினை சுவாசிக்க மறவாதே!!!... -நட்பும் காதலும்...
சொல்லாமல் வருவது நட்பு...
தன்னைத்தானே தன் பெயரை சொல்லித் திரிவது காதல்...
தன்னைத் தானென்று அறிய வைக்கும் நட்பு...
தன்னைத் தானே மறந்து நிற்கும் காதல்...
காயங்களுக்கு மருந்தாகும் நட்பு...
மனதினை ரணமாக்கும் காதல்...
வலியின் தழும்புகள் நட்பில் இல்லை...
தழும்புகள் இல்லாமல் காதலில் வாழ்க்கையில்லை...
உன்னை வாழ வைக்கும் நட்பு...
சில நேரத்தில் உயிரை விலையாய் கேட்கும் காதல்...
அமிர்தத்தை அள்ளிக் கொடுப்பது நட்பு...
நஞ்சு கலந்த அமிர்தமாய் கூட உருவெடுக்கும் காதல்...
கொட்டும் மழையும் குடை விரிக்கும் நட்பிற்கு...
பெய்யும் பணியும் தணலாய் மாறும் காதலுக்கு...
தவறை தவறாது தண்டிக்கும் நட்பு...
தவறை தவறாமல் செய்யத் துடிப்பது காதல்...
நட்பிற்கு விலையில்லை என்றுமே...
கண்ணீர்த்துளிகளை விலையின்றி கொடுக்குமே காதல்...
நட்பிற்கு நாம் என்ற பெருமை...
காதலுக்கு தான் மட்டுமே என்ற தற்பெருமை...
தோற்றுப் போனதாய் நட்பிற்கு வரலாறு இல்லை...
தோல்வி காண வரலாறு இல்லை காதலில்...
பிரிந்து வருந்தும் நட்பையும் காலம் சேர்த்து வைக்கும்...
சேர்ந்திருக்கும் காதலையும் பிரிக்கத் தவறுவதில்லை காலம்...
ஜாதி மதம் பார்ப்பதில்லை நட்பு...
இனம் மொழி பாரா காதலுண்டோ!?...
கண்ணீர்த்துளிகளின் தடத்தை தடம் இன்றி போக்கும் நட்பு...
வலியின் சோகத்தை தடம் பதிக்க மறப்பதில்லை காதல்...
கனவுகளை நினைவாக்கும் நட்பு...
நினைவுகளை கூட கனவாக்கும் காதல்...
மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நட்பு...
வாழ்க்கையே இல்லை என சிந்திக்கும் பிரிந்து விட்ட காதல்...
இளைஞனே காதலில் வாழ்க்கையைத் தொலைக்காதே!!!...
நட்பினை சுவாசிக்க மறவாதே!!!...
-நிலா தோழி...