தோழிக்காக ........
யாருக்காகவும் நான்
காத்திருந்ததில்லை
(காதலியையும் சேர்த்து )
முதன் முறையாக
காத்திருக்கிறேன்
தோழியே உன் வருகைக்காக .......
யாரிடத்திலும் நான்
அதிக பற்று கொண்டதில்லை
(கடவுளையும் சேர்த்து )
முதன் முறையாக
ஏங்கித்தவிக்கிறேன்
தோழியே உன்னை காண்பதற்காக .......
யார் பேச்சையும் நான்
செவி சாய்த்து கேட்டதில்லை
(அம்மாவின் பேச்சையும் )
முதன் முறையாக
செவி சாய்க்கிறேன்
தோழியே உன் பேச்சிற்காக ........
யாரிடமும் நான்
அதிக அன்பு கொண்டதில்லை
(நண்பர்களையும் சேர்த்து )
முதன் முறையாக
பைத்தியமாகிறேன்
தோழியே உன் பாசத்திற்காக ..........
யாரையும் நான்
வணங்கியதில்லை
(கடவுளையும் சேர்த்து )
ஏனோ தலை சாய்கிறேன் உன்னிடம்
தலை முடி கோதும் மாறாத
உன் அன்பிற்காக ..........
யாருக்காகவும் நான்
எதையும் விட்டுதந்ததில்லை
(தன்மானத்தையும் சேர்த்து )
முதன் முறையாக
விடத்துதுணிந்தேன்
தூய்மையானஉன் உள்ளத்திற்காக ........
இறுதியாக என்
உயிரையும்
விட தயாராக இருக்கிறேன் .......
தோழியே
பிரிவில்லா
நம் நட்பிற்காக .........
(என் தோழிக்காக )