***இவள் தான் என்னுயிர்த்தோழி****
விழிகளில் ஈரம்
மனதினில் பாரம்
கனவுகள் ஆயிரம்
இருள் தான் அவளுக்கு வசந்தம்
நிமிடங்கள் அவள் சிரித்தால்.......
.
மணித்தியாலங்கள் அவளை அழ வைக்கும்.
துயரம் அவளுக்கு தொடர்கதை.
வாழ்க்கையுடன் தினமும் போராட்டம்.
எப்படியெல்லாம் வாழும் மனிதர்க்கு நடுவில்
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கை
கொண்டவள்!
இறைவா! என்ன இது சோதனை
மற்றவர்கள் துன்பத்தை கண்டு துக்கப்படும்
அவளை உயிரோடு வைத்து தினம் தினம் சித்ரவதை செய்கிறார்கள்.
மற்றவர்கள் அதிசயங்களை கண்டு ரசிப்பார்கள் _
இவளோ
அதிசயமாகவே பிறந்து விட்டாள்.
உள்ளுக்குள் வலிகளை புதைத்து விட்டு _
சந்தோசமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வாள் .
இளவயதில் தன் சந்தோசங்களை தொலைத்து விட்டு
பாவையிவள் தவிக்கிறாள்.
அவள் குணத்தில் , மனதில் இன்னும் சிறுபிள்ளையாய் .........
அவளைப்போல்
எனக்கொரு மனசில்லையே என்று ஏங்கியதுண்டு _எதுவரை
அவளின் மனதை அறியாத வரை .._இன்று
யாருக்கும் இந்த நிலைவேண்டம் என்று
உன்னை வேண்டுகிறேன்
.
அவளைப்போல் எதையும் தாங்கும் இதயம்
எனக்கில்லை...
வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனமில்லை _தினமும்
தோல்வியை தாங்கும் அவளுக்கு இதுகூட வெற்றிதான்
.
உண்மையில் நீயொரு புதுமைப்பெண் தானடி......
சிறைப்பட்ட இந்த வாழ்க்கை இனியும் வேண்டுமா?
முடங்கிகிடந்தால் உன்னை மிதித்துக்கொண்டே இருப்பார்கள்.
எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும் .......
இருள் கொண்ட உன்வாழ்க்கை ஒளிரட்டும் ........************