அம்மா...,
"அம்மா"
என்று நான் சொல்லும் ஒரு
வார்த்தைக்காக- ஆயிரம் முறை
'அம்மா , அம்மா , அம்மா '- என்று
பிரசவத்தில் அலறி இருப்பாள்-
எவற்றுடனும் ஒப்பிட முடியாதவள்...,
எந்த ஒரு சமயத்திலும் என் மீது கொண்ட
நம்பிக்கையை கைவிடாதவள்..,
எனக்காகவே அவள் ஆசைகளை மறந்து
என்னை அழகு செய்து பார்த்தவள்...,
என் வெற்றியின் முதல் படி- நீ
என் அழகின் ரகசியம்- நீ
அனைத்தும் உன்னால் உருவாக்கப்பட்டது
ஆதலால் நான் கடவுளிடம் இப்போதே- வரம்
கேக்கிறேன் அடுத்த ஜென்மத்தில்
நீ- என் மகளாக பிறக்க வேண்டும் என்று....!