தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

பெரியோர்க்கு இவ்வுலகில் தாண்டவக்கோனே!
பெரிதாக மதிப் பில்லை தாண்டவக்கோனே!
அரிய மனிதர் எவருமே தாண்டவக்கோனே!
அறிவிற்கு எட்ட வில்லை தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

எளியோர்க்கு எதுவுமே தாண்டவக்கோனே!
எளிதிலே கிடைப்பதில்லை தாண்டவக்கோனே!
மலிவான பொருள் விலை தாண்டவக்கோனே!
மலை போல ஏறிடுச்சு தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

பால் விலையும் பறக்குது தாண்டவக்கோனே!
பாவி மனசு அடிச்சுக்குது தாண்டவக்கோனே!
நூல் விலையும் எங்கேயோ தாண்டவக்கோனே!
நூடுல் ஸாகி திரியுறேனே தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

பஸ் டிக்கட்டும் ஏறிடுச்சு தாண்டவக்கோனே!
பர்ஸ் காலி ஆயிடுச்சு தாண்டவக்கோனே!
பட்ஜட் ரொம்ப ஒதக்கிது தாண்டவக்கோனே!
கட்லட் போல வேகிறேனே தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

தங்கம் விலை என்ன தாண்டவக்கோனே!
தாறுமாறா ஏறிப் போச்சு தாண்டவக்கோனே!
பொண்ணு பெத்த மக்கள்தானே தாண்டவக்கோனே!
பொருமி இருமி கிடக்குறாங்க தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

வருமையிலே வாழும் மக்கள் தாண்டவக்கோனே!
வசதி பெற என்ன வழி? தாண்டவக்கோனே!
விவசாயி அவன் பொருள் தாண்டவக்கோனே!
விலை பேச இன்னொருவன் தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

பருவ மங்கை பலருமே தாண்டவக்கோனே!
பருந்துகளிடம் சிக்குவதேன் தாண்டவக்கோனே!
ஈசியாக ஐ.டி பணம் தாண்டவக்கோனே!
ஈ.சி.ஆரில் இவர்கள் குணம் தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

கேளிக்கை பல கலந்து தாண்டவக்கோனே!
கேவலமா ஆகு றாங்க தாண்டவக்கோனே!
மாவு ஆட்டும் கையில தாண்டவக்கோனே!
மதுவை வைத்து ஆடுறாங்க தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

நாடு எங்கே போகுது? தாண்டவக்கோனே!
நடப்பு என்ன ஆகுது? தாண்டவக்கோனே!
நன்மக்கள் எங்கே காணோம் தாண்டவக்கோனே!
வன்மக்கள் ஒழிய வேணும் தாண்டவக்கோனே!

தந்தானே தந்தானே தாண்டவக்கோனே!
நொந்தேதான் போனேனே தாண்டவக்கோனே!

-கவிமகன்

எழுதியவர் : கவிமகன் (20-Jan-12, 7:40 pm)
சேர்த்தது : கவிமகன்
பார்வை : 338

மேலே