நிராகரிக்கப்படும் விண்ணபங்கள் ..........
முதுநிலை படிப்பிற்காக
விண்ணப்பித்தேன்
ஒரு கல்லூரியில் .......
அங்கே
நிராகரிக்கப்பட்டேன்
என் மதிப்பெண்ணால் .........
என் வாழ்க்கைக்காக
காதல் கடிதம் விண்ணப்பித்தேன்
காதலியிடம் .........
அங்கேயும்
நிராகரிக்கப்பட்டேன்
அவளின் அலச்சியத்தால்.......
தவறை திருத்திக்கொள்ள
விண்ணப்பித்தேன்
தோழியிடம் .......
அவளாலும்
நிராகரிக்கப்பட்டேன்
கோபத்தால் .........
கடவுளிடம்
வரம் வேண்டி
விண்ணப்பித்தேன் .....
அவராலும்
நிராகரிக்கப்பட்டேன்
சாப்பத்தால் .....
இப்படியே
விண்ணப்பித்து விண்ணப்பித்து
தெரிந்துகொண்டேன் .......
யாரும் என்
விண்ணப்பத்தை
நிராகரிக்கவில்லை .......
அவர்கள் நிராகரித்தது
நிராயுதபாணியாக நிற்கும்
என்னை மட்டுமே .....என்பதை ....
இப்படி ,
எல்லோரிடமும்
விண்ணப்பித்த நான் ......
ஒரு முறை கூட
விண்ணப்பிக்க வில்லை
என் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு ......
நிராகரிக்கப்படாத
நபராகவேண்டுமெனில்
நிலையான வேலை
வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன் ......
நான் போராட துணிந்துவிட்டேன்
நம்பிக்கையை துணையாக
அழைத்துக்கொண்டு .......
அதன் முதல் படியாய் .........
அண்ணா ! ஒரு
செய்தித்தாள் கொடுங்க
டெக்ஸ்டைல்ஸ் குவாலிட்டி கன்ரோலர்
வாண்டேடு உள்ளதாணு பாக்கணும் .........