பள்ளிக்கூட நாட்கள்....,

ஆங்காங்கு மரத்தடியில் பெரிய அளவில்
நண்பர்கள் கூட்டம்....

அனைவரும் ஒரு வீட்டு பிள்ளைகளை-போல
ஒரே கலர் சீருடையில்....,

சின்ன சின்ன சண்டைகள்- கவலைகள் மறந்த சிரிப்புகள்....,

தோழி,தோழராக பழகிய டீச்சர்கள்...,

எப்போதும் மறக்காத விளையாட்டு வகுப்பு,
குரூப் போட்டோவில் நண்பர்கள் சேட்டை-

இந்த நாளுடன் நாம் "பிரிந்து செல்கிறோம்" என்பதை மறந்து...,

பள்ளி ஆண்டுவிழாவில் கிண்டல் கேளிக்கைகள்.....,

மாலையும் வந்தது,
பிரியும் வேலையும் வந்தது...,

கண்களில் நீர் வடிய - என் தோழியிடம்
பிரியா விடை பெற்றேன்...,


"என்னை மறந்து விடாதே" என கூறிய தோழிக்கு-

"நான் உயிருடன்தான்" இருக்கிறேன்-

என நான் கூறிய வார்த்தைகள்

இன்னும் என நினைவில்...,

எழுதியவர் : POMMU (22-Jan-12, 5:02 pm)
பார்வை : 690

மேலே