தமிழ்!

ஆழ் கடலென இருக்கிறது தமிழ்!
ஆயினும்...
அலைகடல் நுரையென,
ஆங்காங்கே ஒதுக்கபடுகிறது,
ஓவ்வோர் முறை
பிறமொழிக் கப்பல்கள்
பயணிக்கும்பொழுதும்...

அடிக்கும் தந்தையல்ல தமிழ்!
அரவணைக்கும் தாய் அவள்!
அடிக்கடி சண்டை போடும்
காதலியல்ல தமிழ்,
அன்பாய் ஆறுதல் சொல்லும்
தோழமை உண்டு இவளிடம்!

நட்சத்திரங்கள் மொழியென
அழைக்கப்படுமேயானால்,
தமிழை சூரியனென்பேன் நான்.
அதிக அணுப்பிளவுகள் நிகழ,
அதிகமாக அனைவரும் புகழ,
ஆதிக்கம் செலுத்துவது
ஆதவன்தான்!!!
அதைப்போலத்தான்
அன்னைத் தமிழும்!!!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (25-Jan-12, 3:52 am)
பார்வை : 401

மேலே