பிறப்பிற்கு அவமானம் யாதெனில்
உண்மையை அறியாதவரை
உலகம் பொய் - வாழ்வியல்
உண்மையை அறியும்தருணம்
வாழ்ந்துமுடிக்கப்பட்ட வாழ்க்கை பொய்
பொருளற்ற வாழ்க்கை
பிறப்பிற்கு அவமானம்,
பொருள் தேடும் வாழ்க்கை
இருப்பதற்கு பிடிமானம்
ஆனால்,
வாழ்வியல் பொருளறிந்து
இயற்கையோடு தன்னையும்பூட்டி
இல்லார்க்கு நல்வழிகாட்டி
பிறர்க்கு நற்ப்பயனளிக்கும்வண்ணம் வாழ்வோரே,
இருப்பிலும்
இறப்பிலும்
இறப்பைத்தாண்டிலும்
என்றும் போற்றப்படும் பெருமான்.