முப்பொழுதும் உன் கற்பனைகள் ..!!!

என் வார்த்தைகளில்
சில சமயம்
வாள் கட்டியிருக்கலாம்
பெண்ணே அது பல சமயம்
உன்னை தேளாய்கொட்டிருக்கலாம்
இவை உன்னைக்
காயப்படுத்தவல்ல...
கடைசி வரை என்னை
ஞாபகப்படுத்த...

பிரிய சிநேகிதி
நான் உன்னை நேசித்தேன் ,நேசிக்கிறேன்
நீ நேசிக்காதபோது கூட
ஏனெனில்,
நீ மட்டும் தான்
அன்போடு என்னை நோக்கினாய்
அன்பால் என் தலை கோதினாய்

அழகில்லாதவன்
நான்!
'அழகில்' ஆதவன்
இல்லை!

சிநேகிதி உன்போல்
இன்னும் பலர்
எனை வேண்டாம்
என்று வெறுக்கட்டும்
என்னிதயத்தில் தீயை
இறைத்து ஊற்றட்டும்
சோகமே எனக்குச்
சொந்தமாகட்டும்!
காயம்
பெருகட்டும்
கண்ணீர் கூட காயாமல்
நிற்கட்டும்,

முட்டாள் நான் கூட கவி
புனைவேன் என் கவியே
எனக்குத் தலைகோதி விழி
நீர் துடைக்கட்டும் ..!!

நல்லது சிநேகிதி...
தயவுசெய்து
என்னை
மன்னித்துவிடு

ஒற்றை சொல்லில் நீ தந்த
அன்பு ..
வருடம் பல என் ஆயுளை
சுமக்கும் ..
உன்னை நினைக்கும்பொது
மட்டுமே மனம் இனிக்கும்.. !!

பெண்ணே
முப்பொழுதும் உன் கற்பனைகள்
கற்பனைகளே
என் வாழ்வின் நிஜங்களாய்...
இன்றளவும்..!!!

ஒன்றுமட்டும் என் வேண்டுகோள்
இறைவனிடம் ..
மரணம் என்னை தழுவும் முன் ..
ஒருமுறையேனும் உன்
திரு முகம் காணவேணும் ..
மறு கணம் மரணம்
என்னை வெல்லட்டும்
ஜீவன் இந்த உடலை விட்டு
பிரியட்டும்
முடிந்தால் இந்த உடல் உன்
மடியில் வீழட்டும்

என்றும்...என்றென்றும்....

எழுதியவர் : jeevan (29-Jan-12, 6:51 am)
பார்வை : 412

மேலே