உனக்காகவே இசை பாடுவேன் நான்

காரோடும் கூந்தலில்
கலைந்தாடும் தென்றல்
கண்களிரண்டில்
மீனோடும்
செவிதழ் இரண்டில்
தேனோடும்
அசைந்தாடும் இடையில்
தாமரை மலராடும்
அந்த அழகினைப் பார்த்து
வான் ஓடும் நிலவும்
வந்து வணங்கி நிற்கும்
ஊரோடு உனைப் பார்த்திருக்கும்
வேளையிலே
கவிதை தேரோடு நான் வந்த போது எந்தன்
விழியோடு கலந்த பெண்ணே
இந்த மாலை எல்லாம் நமக்காகவே வா
உனக்காகவே இசைபாடுவேன் நான்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-12, 11:27 pm)
பார்வை : 250

மேலே