அழகாய் இருக்கிறாய்...!!!
எதிர்பாராத நம் சந்திப்பில்
உன் வாகனத்தை
என்னருகே
நிறுத்திவிட்டு
உன் கருப்பு நிற
ஹெல்மெட்டை
தலையிலிருந்து கழற்றி
புன்னகையுடன்
என்னை பார்க்கும் நொடிகளில்...,
கூண்டின் கதவை திறந்து
வெளியே வரும்
கிளியை போலவே
அழகாய் இருக்கிறாய்...!!!