நல்லொழுக்கம்-ஆன்மீகம்-நாட்டொழுக்கம்..!

குன்றா ஒழுக்கம் குறைவிலாப் பண்பாடு
நன்றாய் இவைகல்வி நல்குமேல்-இன்றேன்
பணத்தின்மேற் செல்லுமோ பள்ளிகள்? கற்றும்
குணத்தின்மேல் வையார் குறி! (1)

ஆன்ற குடிப்பெருமை, ஆகிவரும் நல்லொழுக்கம்
தோன்றப் படிபறிவு தூண்டுமேல்- சான்றோரே
எங்கும் இருப்பர்! இருக்காதே கையூட்டும்!
தங்குமே நேர்மை தழைத்து! (2)

ஏனில்லை தூய்மை இதயத்தில்? இன்சொல்லில்
ஏனில்லை வாய்மை எமக்குள்? -ஏனில்லை
நேர்மை செயலில். நிகழ்வுகளில்? காசாசை
சீர்மை அழிக்கும் சிதை! (3)

பொருளையே ஆதாரம் போற்சொன்னோம்;
( வாழ்வை
இருளிலே வேட்டைஎனச் செய்தோம்! -அருளிலாக்
காட்டுள் அனுப்பியபின் காட்டுவரோ
(நல்லொழுக்கம்?
கேட்டுப் பயனென்,இங் கே! (4)

நல்லொழுக்கம் ஆன்மீகம்! நாட்டொழுக்கம்
(இங்கதனால்;
‘இல்’ஒழுக்கம் கூட்டும் இவையெலாம்! -
(-தொல்லொழுக்கின்
சான்றோர் பலரும் சரியென்று இவைசொன்னார்!
ஊன்றி இவைவளர்ப்பாய் உள்!. (5)
< 0 >

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (2-Feb-12, 2:23 pm)
பார்வை : 375

மேலே