காதல் பேச்சு கரைஞ்சி போச்சி...!
கிள்ளி என்ன பாத்துப்புட்டேன்
மயங்கி நானும் போகவில்லே...
சொல்லிப் புட்டு போன மச்சான்
சூப்பராக எதிரில் நின்னான்.....
சீமைக்குப் போன மச்சான்
சிரிச்சிக்கிட்டே எதிரில் நின்னான்...
பொத்துக்கிட்டு சந்தோசம்....
போனேன் நான் அவன் அருகில்...
பொட்டப் பொண்ணு இங்க்லீஷ் காரி
இருந்தாளே அவன் பின்னால்.....
பொசுக்குன்னு மனசாலே
செத்தேனே தன்னாலே
காதல் பாடை கட்டியதே...
காலமெல்லாம் அழுகிறேனே.........
காதல் பேச்சு எல்லாமே
காத்தோட கரைஞ்சி போச்சி...!