என் காதலர் தினம்

ஒவ்வொரு வருடமும் வந்து போனாலும்
குதூகலமாகத்தான் இருக்கிறது இந்த காதலர் தினம்!

காதலுக்கும் குறையில்லை...
காதலலர்களும் குறைவதில்லை...

டூ வீலரின் பின் சீட்டில் பின்னிக்கொண்டும்,
திரையரங்குகளின் கடைசி இருக்கைகளில் நிரப்பிக்கொண்டும்,
சிறுவர் பூங்காக்களில் சிரித்துக்கொண்டும்,
சாலையோரங்களில் உரசிக்கொண்டும்,
செல் போனில் கெஞ்சிக்கொண்டும்,
சாட்டிங்கில் கொஞ்சிக்கொண்டும்
இருக்கின்ற பலரையும் பார்க்கையில்,

சிலருக்கு சந்தோஷம்,
சிலருக்கு கோபம்,
சிலருக்கு வருத்தம்,
ஆனால் எனக்கு ஏக்கம் மட்டுமே...

35 வயது முடிந்த முதிர்க்கன்னியாக நானிருப்பதால்!

எழுதியவர் : sameer (2-Feb-12, 7:09 pm)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 213

மேலே