எடுத்துவிடடி பராசக்தி..

அடியே பராசக்தி
சுயநலக்காரி
மனநோயாளி..

உந்தன் முகந்தனில்
உண்டா செவி?
எங்கே எந்தன்
முண்டாசுக்கவி?

ஏடெடுத்து பாட்டெடுத்த
எங்கள் அறிவெடுத்த
வீரக்கவி உனக்கா?
கழிப்பது மட்டும்தான்
நீயறிந்த கணக்கா?

தன்னலமெண்ணி
எந்நலம் மறந்தாயோ?
பாரதி பாட்டு கேட்டு
எடுத்து செல்ல விரைந்தயோ?

அகிலமாலும்
நீயும்
அவனுக்கு
அடிமையென்றால்
புவிப்பிறப்பெடடி
எம்தலைவனுக்கு
உயிரே கொடடி.

எண்ணும்
எழுத்தும்
எந்தன்
உயிரும்
ஏங்குதடி..
அவன்மேல்
கொண்ட
காதல்
ஓங்குதடி..

அவனை
கொடுத்துவிடு
சிவசக்தி..
இல்லையேல்
எம்மை
எடுத்துவிடடி
பராசக்தி..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (3-Feb-12, 12:40 am)
சேர்த்தது : எழுத தெரியாதவன்
பார்வை : 259

மேலே