இயற்கைத் தாயே!

அலைகளென ஆர்ப்பரிக்கும் பேரொலியும் நீயே
ஆழ்கடலில் நிலவுகின்ற அமைதியும் நீயே
இடியுடன் வரும் மழையும் நீயே
ஈரம் தரும் பனியும் நீயே
உணவைத் தந்து எங்கள் உயிரைக் காப்பதும் நீயே
ஊரே தரும் கழிவை உரமாய் ஏற்பதும் நீயே
எரிமலையில் எழுகின்ற வெப்பமும் நீயே
ஏற்காட்டில் நிலவுகின்ற குளிரும் நீயே
ஐந்து பூதங்களாய் இருப்பதும் நீயே
ஒருபணி ஆற்றாத வானமும் நீயே
ஓயாத காற்றின் கானமும் நீயே...
அழகின் பிறப்பிடமான இயற்கைத் தாயே!
-கலைசொல்லன்