நலமா......?

கண் திறக்கும் அந்த காலைப்பொழுது...
நம் விழியோரம் தென்படும் வெளிட்சம்..
பின் தூயமையைதேடும் நம் தேகம்...
அதனுடன் உறவாடும் நீர்த்துளிகள்...

பசியெடுக்கும் வேளையிலே நம் பசிதீர்க்கும்
சுவைமிகுந்த பழங்கள்...

பொருள் தேடிபுறப்படும் மனிதனே...!!
உன் நலன் கருதி பின்தொடரும் சூரியன்....

நீ சாலையிலே செல்லுகையில் உனை மெல்ல கையசைத்து வழியனுப்பும் மரங்கள்.......

வீசிக்கொண்டிருக்கும் எதிர்க்காற்றோ உனை நலம் விசாரிக்கும், நீ நலமா...??

நீ வீடுதிரும்பும் அந்த மங்கிய இரவில் உன்னைக்கண்ட மகிழ்ச்சியினை தெரிவிக்க வானில் மின்னிகொண்டிருக்கும் நட்சத்திரங்கள்....

அலைந்து ஓய்ந்த உன் பாதங்களை தொட்டுப்பார்க்கும் ஈரக்காற்று.....

மரங்களும்,கொடிகளும் மெல்ல அசைந்து காற்றை வழியனுப்பும், நாம் அசந்து உறங்க....

நாம் உறங்கிவிடுவோம் ஆனால் அந்த ஜன்னலின் வழியே நம்மை ரசித்துக்கொண்டிருக்கும் மஞ்சள் நிலா......

இப்படி ஒவ்வொரு கணமும் நம்மை காத்துவருகிறாள் இயற்கை அன்னை...

மனிதா.......!!! இவை உனக்கு மட்டும்தானா.....!!??

இல்லை.........

துல்லித்திறியும் கால்நடைகளுக்கும்
பாடித்திறியும் பறவைகளுக்கும்தான் இந்த இயற்க்கை அன்னை இல்லம் அமைத்து கொடுத்துள்ளாள்.......

ஆனால் அவையாவும் செய்யாத்தவறுகளை நாம்செய்து நம் அன்னையைகொள்வது சரிதானா..,,,???
நிறுத்திவிடுவோம் செயற்கை எண்ணங்களை.....

போற்றி மகிழ்வோம் இயற்கையின் வல்லமையை...........

எழுதியவர் : anbu (3-Feb-12, 3:57 pm)
பார்வை : 262

மேலே