மௌனம்
மௌனம்
அப்போது என் பசியினைக்கூட
வெளிப்படுத்த முடியாத
அவல நிலை எனக்கு
பசியற்றினாய் உன் உதிரத்தால்.....
பாடல் கற்க விருப்பம்,
அனுமதி கிடைக்கவில்லை தந்தையிடம்,
மொழி தெரிந்தும் மௌனம் என்னிடத்தில்
விருப்பம் நிறைவேற கண்டேனடி உன்னால்...
அடுத்த ஓரிரு வாரங்களில்,
வீடெங்கும் என் கீதம்
என் களிப்பை மனதிற்குள்
பதிவு செய்தாயடி மௌனமாய்...
மனதின் காதலை உரைத்தேன் உன்னிடம் தயக்கத்துடன்
ஆத்திரமோ கோபமோ கொள்ளவில்லை நீ
இருப்பினும் மனம் வலித்தது உன் மௌனத்தால்
காதலனிடமே ஒப்படைதாய் என்னை அவன் மனைவியாய்
உரையாடல் தொடர்கிறது .......
வார்த்தைகளின்றி......
நீ என்னை பிரிந்த தருணத்தில்....
சிறுவயது முதலே என் மௌனதைக்கூட உணர்ந்த நீ
தற்போது என் வார்த்தையைக்கூட உணர மறுப்பது ஏன்?
கல்லறையில் துயிலும் நீ
உன் மௌனத்தை களைவது எப்போது?