ஈஸ்வர் தேடுகிறார்

சமூக அக்கறை கவிதைகளை யார்


எழுதுகிறார்கள் என்று தேடிக் கண்டு பிடித்து வாழ்த்துகிறீர்கள் ஒரு கதை


உங்களுக்காகச் சொல்கிறேன்


கேளுங்கள்


௧. புற நானூற்றுக் க(வி )தை


சோற்றுப் பருக்கையை ஏந்தி எறும்புக்


கூட்டம் அணிவகுத்துப் போகிறது


பசியால் வாடி நிற்கும் புலவன்


அதைப் பார்க்கிறான். அன்ன தானம்


செய்யும் வள்ளல் ஒருவன் அருகிலே


இருக்கிறான் . அங்கே சிதறிய பருக்கை


களை இந்த எறும்புகள் எடுத்துச்


செல்கின்றன என்று ஊகிக்கிறான்


வழியில் செல்வோரிடம்


"பசிப்பிணி மருத்துவன் இல்லம்


அணித்தோ அன்று சேய்த்தோ


(அருகிலா அல்லது தொலைவிலா )


என்று கேட்கிறான் அது போல் "சமூகப் பிணி தீர்க்க கவிதை யாக்கும் கவிஞரும்


உளரோ இந்தக் காதல் வீதியில் என்று


தேடுகிறீர்கள் நீங்கள். இருக்கிறார்கள்


கவின் உண்டு காந்தி உண்டு முத்து


நாடன் உண்டு வளர் மதி உண்டு


அமுதா அம்மு உண்டு ரஞ்சிதா


உண்டு சுந்தர பாண்டி உண்டு பொள்ளாச்சி அபிஉண்டு பைத்தியக்


காரன் எனும் தமிழ் ஒளிப் புலவன் உண்டு புதுயுகன் உண்டு


எழுதவும் வாழ்த்தவும் என் அருமை


ஈஸ்வர் உண்டு


-----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-12, 4:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே