பெண்கள் எப்போதும் பெண்கள்தான் !

கணிகைக் குலமானாலும்
கண்ணகிக் குலமானாலும்
கோவலர்கள் எப்போதும்
இடம் மாறித் திரிவதில்
வெட்கப்படுவதில்லை !

இராவணன் ஆனாலும்
இராமன் ஆனாலும்
பெண்களைத்
தூக்கிச் செல்வதிலும்
தாக்கிச் சிதைப்பதிலும்
தயக்கப்படுவதில்லை !

கௌரவர்கள் என்றாலும்
கர்ணன் என்றாலும்
பெண்களைத் துகிலுரிதலில்
அச்சப்படுவதே இல்லை !

ஆண்கள் ஆண்கள்தான்
பாவம்
பெண்கள் எப்போதும் பெண்கள்தான் !

எழுதியவர் : முத்து நாடன் (4-Feb-12, 8:00 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 318

மேலே