சும்மா கிடைக்கலடா சுதந்திரம்

சும்மா கிடைக்கல சுதந்திரமுங்க
எரிமலை இங்கே மையம் கொண்டது
சுனாமியாய் பலரும் சீறி நின்றனர்

1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை
இரத்தம் தோய்ந்த மண்ணினை எடுத்தே!
பூஜை செய்தனர் பலரும் இங்கே

ஜெனரல் டயரின் கொடுமை கண்டே!
சிங்கமாய் பலரும் சீற்றம் கொண்டனர்

இளைஞர்களே! இளைஞர்களே!
வரலாற்று ஏட்டின் பக்கங்களை புரட்டுங்களேன்!
நிங்களும் இங்கே எழுச்சி பெறுவீர்கள்

எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை
இந்த நாட்டிலே உண்டென்பதை அறிவீர்கள்
மறைக்கப்பட்ட வரலாறும் பலவும் உண்டு
நாட்டின் மானம் காத்த மாவீரர்களும்
இன்னுயிர் ஈந்த புலிகளும்
இங்குண்டு என்பதை நிங்களும் அறிவீர்கள்

நானும் இங்கே !
மறைக்கப்பட்ட வரலாறு ஒன்றை
கண் முன் காட்ட

எழுதியவர் : (4-Feb-12, 7:52 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 255

மேலே