தொடங்கிய பயணம்
தொடங்கிய பயணம்
கையேடுகளை கரங்களில் சுமந்தவளாய் கல்லூரிக்கு ஓட்டம்...
விடுதி வாசலில்
தென்பட்ட வழியெங்கும் பயணித்தது பார்வை
எஞ்சியது ஏமாற்றமே......
எங்கு சென்றிருப்பாளோ
அந்த ஆறு வயது சிறுமி....?
பூக்கூடையோடு தினம் தினம் என் பயணத்தை
தொடங்கி வைத்தவள் தற்போது
பயணிக்க முற்பட்டது எங்கே?
இருப்பினும் ,
பயணத்தை தொடர்கிறேன்
மன நெருடலை விலக்கி,
இன்றாவது அவள் கல்வி தேடலை
தொடங்கி இருப்பாள் என்ற நம்பிக்கையோடு ....