கவிஞனின் உலகம்
எழுதபடாத புத்தகங்களில் உள்ள உண்மை
வெளியேற துடிக்கிறது
கவிஞனின் எழுத்தால்
அவன் பார்வை படாத அழகு ,அழுகிறது
அவனால் வர்ணிக்கபடவில்லயே என்று
அவன் கை படாத எழுதுகோல் காத்திருகிறது
எப்போது கை ஏந்துவான் என்று
அவனால் தொடபடாத வெள்ளை தாள்
கருத்துபோய் விட்டது அவனுக்கு காத்திருந்து
அவன் சிந்தனை ஓட்டத்தில்
பல கருத்துகள் புதிதாய் சுரந்துகொண்டே இருக்கிறது
வற்றி போகாத சிந்தனையில்
எத்தனை இன்ப துகள்கள்
இயற்கையை ரசித்து ரசித்து
பூக்களின் வாசத்தை சுவாசித்து
எங்கும் மணம் வீசுகிறான்
அவன் எழுத ஆரம்பித்தால்
தமிழும் தேன் சொட்டுகிறது
காலத்தை மாற்றி அமைக்க நினைக்கிறான்
ஆனால் காலம் தன்னை மாற்றிவிடுமோ
என்று அஞ்சுகிறான்
சுய நலம் வெறுத்து தன்னலம் மறந்து
உலகத்தின் அழுக்கை கோடிட்டு காட்டுகிறான்
அவனின் உலகத்தில் நுழைய
எத்தனை பேருக்கு ஆசை ?