சும்மா கிடைக்கல சுதந்திரமுங்க
சும்மா கிடைக்கல சுதந்திரமுங்க
எரிமலை இங்கே மையம் கொண்டது
சுனாமியாய் பலரும் சீறி நின்றனர்
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை
இரத்தம் தோய்ந்த மண்ணினை எடுத்தே!
பூஜை செய்தனர் பலரும் இங்கே
ஜெனரல் டயரின் கொடுமை கண்டே!
சிங்கமாய் பலரும் சீற்றம் கொண்டனர்
இளைஞர்களே! இளைஞர்களே!
வரலாற்று ஏட்டின் பக்கங்களை புரட்டுங்களேன்!
நிங்களும் இங்கே எழுச்சி பெறுவீர்கள்
எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை
இந்த நாட்டிலே உண்டென்பதை அறிவீர்கள்
மறைக்கப்பட்ட வரலாறும் பலவும் உண்டு
நாட்டின் மானம் காத்த மாவீரர்களும்
இன்னுயிர் ஈந்த புலிகளும்
இங்குண்டு என்பதை நிங்களும் அறிவீர்கள்
நானும் இங்கே !
மறைக்கப்பட்ட வரலாறு ஒன்றை
கண் முன் காட்ட முனைகிறேன் பாருங்க !
ஜாலியன்வாலாபாக்கின்
இரத்த மண்ணினை எடுத்தே !
சிறுவன் ஒருவன் பூஜை செய்தான்
கொடுமை கண்டே குமிறினான்
23 ஆண்டுகள் கழிந்த பின்னர்
வெந்தழல் தீயைநெஞ்சில் ஏநதியே !
மின்னல் வேகத்தில் கடல் கடந்தே !
கையில் துப்பாக்கியுடனே இங்கிலாந்து சென்றான்
ஜெனரல்டயரை தேடியே அலைந்தான்
அங்கே அவன் பக்கவாதத்தால் இறந்து போயிருந்தான்
அப்போது கூட விடவில்லை அவன்
பஞ்சாப்படுகொலைக்கு உத்தரவிட்ட
பஞ்சாப் ஆளுநர் டயர் என்பானை
தேடித் தேடி அலைந்தே !
காக்ஸ்ட்டன் மாளிகையில்
கடுஞ்சினத்துடன் சந்தித்தான்
சுட்டான் சுட்டான் குண்டுகள் தீரும் மட்டும்
ஆங்கில நீதிமன்றத்தில்
நீ யார்? என்ற கேள்விக்கு
நான் இந்து அல்ல
நான் முஸ்லீம் அல்ல
நான் சீக்கியன் அல்ல
நான் இந்தியன் என்று சொல்லியே!
தூக்குக் கயிற்றை துணிவுடன் முத்தமிட்டான்
அந்த மாவீரன்தான் உத்தம்சிங்................