"கொஞ்சம் இதை படிச்சிட்டு போங்களேன்"

இது எழுதுகோளுக்காக { PEN }
என் எழுத்தெனும் கோள் கொண்டு
எழுதப்பட்டிருக்கும் கற்பனையின் சிறு தொண்டு....

என்னுள் எழுந்தருளி இருக்கும் காதலி
என்ற பெண்ணுக்காக எழுதவில்லை
என்னை எழுத வைக்கும், நான் எழுதி கொண்டிருக்கும் PEN க்காக எழுதியுள்ளேன்...,

எழுத்து அறிவித்தவன் இறைவனல்ல,
எழுத்தை எழுத்தாக காட்டும்
உன்னை என்னவென்று சொல்ல....

விலை கொடுத்துன்னை வாங்கினாலும்
நான் விலை என்றும் போகலையே...
உன் சின்ன மேனி தொட்டு,
அர்த்தங்கள் ஆயிரமிட்டு,
வண்ண கவி தொடுக்கும் வேளையிலே....

ஐ விரலோடு பிறப்பு,
அது இறைவனின் படைப்பு,
ஆறாம் விரலாய் ஆனதே
உந்தன் இன்றியமையா சிறப்பு......

தன்னலம் மிக்க தரணி மக்கள் மத்தியில்
உன்னலம் விரும்பா உத்தமி நீயன்றோ....

காப்பிய கவி சொல்பவர்க்கும்,
காப்பியடித்து கவி சொல்பவர்க்கும்,
நீ தானே என்றும் ரகசிய காதலி.....

கரம் பிடித்த காதலியானாலும்,
கறை பிடித்த காதலானாலும்,
கவிதையோ கதையோ புனைய,
நீ தானே இருப்பாய் ஆறுதலாய்,
ஆகவே...,
நீ தான் எனக்கு ஆறுதல் "தாய்"

உன் கரம் பற்றி ஒருத்தன் காவியம் மீட்டியதால் தான் "கண்ணகி" யின் அறிமுகம் கிடைத்தது...
அறிமுகம் இல்லா ஆடவன் ஒருவன் ஆண்டவனானான் {இராமாயணத்தில் ராமன்}....

எல்லாவற்றையும் விட,
என்னுள் எல்லாமும் வற்றியும் விட,
உன் பெருமையை எழுத கூட
உன் தயவை தான் நாட வேண்டி உள்ளது

நீ காகிதத்திற்கு கொடுக்கும் முத்தம்
அதில் வரும் எழுத்தெனும் சத்தம் நித்தம்
மணக்கும் கவிதையாய் மணமணக்கும்,
உனக்கு எந்தன் முதல் வணக்கம்....

உன்னை ஏன் அனைவரும் நெஞ்சருகே
வைக்கிறார்கள் என்பது இப்போது தான் புரிந்தது..,
உன் தலை குனிந்தாலும் பிறரை தலை நிமிர வைக்கிறாயே உன்னை அங்கு வைக்கும்
செயல் தான் சிறந்தது, செயலிலே சிறந்தது....!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (4-Feb-12, 3:01 pm)
பார்வை : 620

மேலே