பேருந்துப்பயணம்

ஜன்னலொர மழைத்துளி
செவியைத்தழுவி மனதைக்திருடும்
ராசாவின் இசை.....
அருகே அழுகிற குழந்தை
சில்லரைக்காய் சண்டைப்போடும் நடத்துனர்...
வழியில் வயலும் மலையும்
மடியில் யாரோ கொடுத்து வைக்க சொன்ன
நோட்டு புத்தகம்....
வெட்கத்தோடு பக்கத்தில் பள்ளித்தோழி
"சொர்கத்தில்" நான்
மீண்டும் வருமா
அந்த பேருந்துப்பயணம் !!!!