பயணம் தந்த வலி

என் பயணம் இன்று

வறுமை எனும் கழுகு

வட்டமிடும் வளமில்லா

குளம் கொண்ட குடிசையோரம் ,,,,,,,,,,,,,,!

அங்கு நான் கண்ட

மனித முகத்தின் சுருக்கமே

என் மனதை இருக வைத்த

ஆயுதமாகிப் போனது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

மரக்கால் கொண்டு- தன்

கால் நடுங்க கூன் நடை

முதியவர் மேல் நடை போட்டது -இந்த

வறுமை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

அங்கு

சோற்றுக்கு அழும்

குழந்தையின்

குரலில் வரும் காற்றில்

கூட பஞ்சமே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அவர்களின் சிட்டுகுருவி

வாழ்க்கையில் தொட்டுத் தழுவி

நின்றது இந்த வறுமை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

அவர்களின்

பசிப் பிணி என் கண்களின்

பனி போல் உறைந்து பின்

கண்ணீராய் கரைந்து போனது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!

இன்று

இவர்களின் துயரத்தின்

உயரம் அறிந்த என்னால்

கடவுளிடம் உன் இதயம்

எங்கே என கேட்டு

மறு நடை போட்டது ,,,,,,,,,,,,,,,

மாடி வீட்டில்

மனம் மற்று இருக்கும்

மனிதகோடியெய் நோக்கி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!


இப்படிக்கு

வறுமை என்ற சொல்லுக்கு விலங்கு போட

ஆசைபடும் உங்களில் ஒருவன் உ. தினேஷ்பாபு

எழுதியவர் : DINESHBABU (4-Feb-12, 11:17 pm)
பார்வை : 250

மேலே