என் இலக்கு
என்
கற்பனையின் சக்தி – எத்தனை
“ GB” தெரியவில்லை !
என்
வாழ்கையின் நீளம் - எத்தனை
“MB “ புரியவில்லை !
என்
செயல்களில் உண்மை -எத்தனை
“KG” விளங்கவில்லை !
என்
சிந்தனையில் இலச்சியத்தின் பங்கு – எத்தனை
“ டன்” கணக்கில்லை !
என்
இலச்சியத்தை நோக்கிய கனவுகள் -எத்தனை
“மில்லியன்” அளக்கவில்லை!
என்
கனவுகளை நிஜமாக்க
விடாமல் கட்டப்பட்டிருக்கும்
கயிறுகள் --- எத்தனை “ பில்லியன்”
இன்னும் ஒன்றை கூட அவிழ்க்கவில்லை!!!!