விடியலைத் தேடி...
அவள் விடியல் சற்று வேறு பட்டது
அவளை எழுப்புவது அன்னையல்ல-வயிற்றுப்பசி
அவள் காலை உணவு இட்டிலி அல்ல-பழைய சோறு
அவள் செல்வது படசாலைக்கல்ல-தொழிற்ச்சாலைக்கு
அவள் பொழுதுபோக்கு விளையாட்டல்ல-வீட்டு வேலைகள்
அவள் கைகள் சிவப்பது மருதாணி வைத்தல்ல-செங்கல் சுமந்து
அவள் முதுகில் சுமப்பது புத்தக மூட்டயல்ல-குடும்ப பாரத்தை
அவள் கொண்டாடுவது தீபாவளி பொங்கலை அல்ல
வயிறார மூன்று வேளை சோற்றைதான்
தேடுகிர்களா அவளை?
அவளை பேருந்து நெரிசலில்,தார் சாலையின் ஓரங்களில்
பட்டாசு ஆலைகளில் பட்டினிச் சாவுகளில் காணலாம்
அவளின் இரவுகள் மட்டும் விடியலைத் தேடி விடிவதில்லை
தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி மட்டுமே விடிகின்றன
என்று விடியும் அவளது இரவுகள்?
விடியலைத் தேடி...?