கண் தானம்
என் மண்டை ஓட்டில்
அரித்த கண் இருந்த இடம்
குழி விழுந்து தெரிந்தால் அது
உங்கள் கண்களின் குறைபாடு
உண்மையில் அது ஒரு
அழகான கலங்கரை விளக்கம்
அவன் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறான்
அவன் வாழ்க்கை கப்பல்
என் கண்களின் மூலம் பயணிக்கிறது