சாட்சி

தோழி:
ஆரல்மீன் குருகு பார்த்தே ,அமைந்தவோர் நதியின் ஓரம்,
நீர் அகல் தவளை கூவி, நித்தமும் சொல்லி நிற்க,
வீரனை அணைந்த போது வேறுஒரு சாட்சி இல்லை !
யாருடம் சொல்லு வாய்நீ ! யாது நாம் செய்யப் போமோ ?

தலைவி :
தேடிய கண்கள் சாட்சி, திறந்தவாய் மீன்கள் சாட்சி !
கூடிய புட்கள் சாட்சி ! குளிர்மலை அருவி சாட்சி!
பாடிய குயிலும் சாட்சி! பதுங்கிய நிலவும் சாட்சி!
ஓடிய தலைவ னோடேன், உள்ளமும் இருக்கும் சாட்சி !
++௦++

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (7-Feb-12, 7:56 pm)
பார்வை : 284

மேலே