நட்பின் உணர்வுகள் .

எதிர்பார்ப்புகள் இன்றி
ஏற்றுக்கொண்டோம்
ஒருவரை ஒருவர்
நண்பர்களாக

... எதிர்பார்கின்றோம் இன்று
எதிர்காலத்திலும் நம் நட்பிற்கான
ஏக்கங்கள் தொடரவேண்டும்

பள்ளி வயதில்
பாலனை பிரிய
மாதா மனம்வருந்தினால்
மகன் மகான் ஆவது எப்படி ?

இளமை வயதில்
இலக்கை நோக்கிய நம்
இலட்சிய பாதையில்
இடை இடையே சில
இடைவெளிகள் நட்பிற்கு
இம்சையான தோன்றும்
இன்பமாக ஏற்றுகொள்வோம்.

கண்ணுக்கு எட்டும் தூரத்தில்
நட்பை காணவில்லை என்று
நம்பிக்கை இழப்பதற்கு
நாம் ஒன்றும் நாஸ்திகர் இல்லை

ஊர் தாண்டி போனாலும்
உறவுகளுக்கு மேலாக
உயிர்விடாமல் எப்போதும்
உரசிக்கொண்டே இருக்கும்.
நட்பின் உணர்வுகள் .

எழுதியவர் : janany (8-Feb-12, 9:39 pm)
பார்வை : 684

மேலே