மின்வெட்டு
கல்வெட்டு இல்லா
ஊர்கள் இருக்கலாம்
மின்வெட்டு இல்லா
ஊர் ஏதேனும் இருக்குமா ?
ஊருக்கு ஊர்
கல்வெட்டுக்கு
செய்த செலவுகளை
மின் வெட்டுக்கு செய்திருந்தால்
தடுத்திருக்கலாம் மின்வெட்டை
உங்கள் ஊரில்
எத்தனை கல்வெட்டு
என்றால் எண்ணி விடலாம்
எத்தனை மணி நேரம்
மின்வெட்டு என்றால்
யாருக்கு உறுதியாக தெரியும்
மின்வெட்டு நேரம் கூடுகிறது
மின் அளவு குறைகிறது
மின் கட்டணம் குறையவில்லை
எந்த ஆட்சி வந்து
எந்த மக்களுக்கு
என்ன பயன் ?
யாருக்கு தெரியும்
அவர்களுக்குதான் புறியும்
நிலவு ஒளியை
கொடுத்த இறைவன்
இரவை பகலாக்கி
இல்லம் தோறும்
இளம் செடிகளை
மின்விசிறியாக்கி இருக்கலாம்
என்றும் அன்புடன்
இது ஒரு மின்வெட்டுக்காக