கர்வ கடல்

தேடியதெல்லாம் கிடைக்கும்தானே
தேவைக்குமீறி உன்னிடமிருக்கே
பலகோடிசதுர பரப்பளவில்
கொஞ்சம்தானே நிலமாய்கொடுத்தாய்

யாரடிஉன்னை எம்மிடத்தில்
காலடிவைக்க சொன்னது
பாரடி இந்தமக்களை
பார்வைகூட கூசுது

கேளடிஅவர்களின் ஓலத்தை
கேட்ககாது வலிக்கிறது
கூறடிகடலே கூறடி
இந்தகொலவெறி உனக்குமேனடி

உன்எல்லைதாண்டிய தீவிரவாதம்
இல்லைஎங்களிடம் இராணுவம்
கொள்ளையடித்து நீபோனாய்
கொண்டுஎங்கே போய்சேர்த்தாய்

உன்சின்ன மீன்களைபிடித்ததற்க்கா
சன்னஇரக்கமும் கொள்ளாமல்
கொந்தளித்து வந்தாயோ-எனில்
கொடுமையடி மிககொடுமை

அன்னைக்கடல் என்றுதானே
ஆசையாயுன்னை அழைத்துவந்தோம்-அது
கண்ணைமறைத்து விட்டதோ
இந்தகார்வமுனக்கு ஆகாதடி

எந்தமுகத்தோடு இனிதான்
உன்னைப்பார்த்து ரசிப்பது
எப்போதுமுன்னை கண்டாலே
"சுனாமி" ஞாபகம்தான்வருகுது

எழுதியவர் : மதனா (10-Feb-12, 12:37 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 156

மேலே