ஏ... மாணவ சமுதாயமே!!

உங்களில் ஒருவன் செய்த பெரும் பிழையால்
ஒட்டுமொத்த மாணவ சமுகத்தின் பேரில்
நம்பிக்கை அற்றுப் போனதே...
கட்டுப்பட்டு கவனமும்
செலுத்தவேண்டிய வயதில்
தறிகெட்டு திரிந்தவனால்
தரம் இழந்து போனதே...

எப்படி மனம் துணிந்தான்?
ஐயோ... என்ன காரியம் செய்துவிட்டான்
ஒரு நொடி அறிவிழந்ததால்
ஒரு உயிரையே மாய்த்து விட்டான்...

எப்படி துடித்திருப்பாரோ...
என்ன வெல்லாம் நினைத்திருப்பாரோ...
அதிர்ச்சில் உறைந்திருப்பார்
தான் சொல்லிய பாடம் விரயமாகிப்போனதும்
தன் மாணவன் தரம்கெட்டதும் எண்ணி
சிதைந்திருபார் உள்ளே உடைந்திருப்பார்...
தன் தாய்தந்தையை நினைத்திருப்பாரோ
தன் பிள்ளையின் முகம் நினைத்திருப்பாரோ
சீரழிந்தவனின் சிறப்பொழிந்து போவதெண்ணி
மனம் உடைந்திருப்பார் இதயம் வெடித்திருபார்
உயிரை பிரிந்திருப்பார் சுவர்க்கம் புகுந்திருப்பார்
நரக வேதனையில் இருப்பார் உங்களை எண்ணி...

மாணவர்களே! என் இளந்தொழர்களே!
உங்களை அலைகழிக்கும் ஆயிரம் வழிகள் உண்டு
பிஞ்சு மனதை நஞ்சாக்க பலவும் உண்டு
நல்லவைகள் எப்பொழுதும் அமைதியாக இருக்கும்
கெட்டவைகள்தான் மிகவும் கவர்ந்திழுக்கும்
படிக்கின்ற வயதில் உன்னை பாழாக்கிவிட
மோசாமான பலவும் காத்திருக்கு...
கவனம் கவனம் வழக்கை மிக கவனம்
வாழ்வின் தொடக்கம் இது...
தொடக்கம் சரிந்துவிட்டால் உன் வாழ்வே சரிந்துவிடும் உன் வம்சம் மண்ணாகிவிடும்...

உனக்கு படிப்பு சொல்லும் ஆசிரியருக்கு
உன்னை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது
உன்னை கண்டிக்க அத்தனை உரிமையும் உண்டு
அடங்கி நட பணிவாக இரு மதிப்பு செலுத்து
உனக்குள் நன்மை வளரும்
உனக்கான நன்மைகள் உனைவந்து சேரும்
காத்திரு விழித்திரு கவனித்திரு!!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (11-Feb-12, 2:07 am)
பார்வை : 240

மேலே