நல்ல அரசாங்கம்..!!

மதுபான கடைகளுக்கு கூடுதல் நேரம் வழங்கி
'குடி'மக்களின் ஆதரவை பெற்றுவிட்டீர்...
பால் விலை பேருந்து கட்டணம் உயர்த்தி
பெருநன்மை செய்துவிட்டீர்...
மின்வெட்டு இல்லாத நாளே இல்லை என்று
தமிழ்நாடே வியக்கும்படி செய்கின்றீர்...
'தானே' புயலால் துவண்டு போன மக்களுக்கு
அரைகுறையாய் செய்ததை
சொல்லிச்சொல்லி மார்தட்டிக்கொண்டீர்...
எதிர் கட்சி எனவொன்று இருக்கவேண்டாம் என்று
வெளித்தல்லியே பெருமை சேர்த்துக்கொண்டீர்
அரங்கேரியிருக்கும் கொடுமைகளை கண்டுகொள்ள
உங்களுக்கு எங்கே நேரம்...
தரம் கெட்ட ஆசிரியர்களும் தரம் இழந்த மாணவர்களும்
தினம் தினம் வந்து போகட்டும் செய்தித்தாள் தலையங்கமாய்...
பாடத் திட்டம் மாற்ற மாட்டோம்
தவறுகள் தடுக்க வழிவகை செய்யமாட்டோம்
உங்களுக்கு அதெல்லாம் எதற்கு?
அது நல்லாச்சி செய்பவர்கள் யோசிப்பது...

எழுதியவர் : ரத்னா (11-Feb-12, 2:53 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 283

மேலே