நாட்டில் வேட்டையாடும் காட்டுராஜா
வேட்டைக்கு பிறந்தவன்
காட்டைக் கடந்தான்
நாட்டம் கொண்டவன்
நாடு கண்டான்
கூட்டம் கொண்டவன்
கூடுவென்று
கோட்டை கொண்டான்
கோட்டை கண்டவன்
(ஆரம்ப)கொள்கைமறவாது
அரசியல்கொள்கையாக்கி
அகம் ஏசி
புறம் பூசி
அறியாதோர்க்கு அறியாவண்ணம் அழுத்தமாய்ச் சொன்னான்
"நாடு கண்ட
காடு மறவாத
காட்டுராஜா நான்தான்
எனக்கு தினம்தோறும்உணவு
நீ நீ நீ நீ நீ நீ ........................................நீதான்".
---கவிதை முற்றிற்று.
குறிப்பு:
வேட்டைக்குப் பிறந்தவன் என்பதற்குப் பொருள் - இரண்டு
முதலில் வேட்டையாடப்பட்டான் (குரங்கு)
பிறகு வேட்டையாடினான் (குரங்கிலிருந்து மனிதன்)
மறுகுறிப்பு :
(ஆரம்ப)கொள்கையின் பொருள் -
"காட்டில் பலசாலிதான் வெல்வான்", "தோற்ப்பவர் இரையாவார்"
Englishmen used to say that "Only strong can survive". ஆனால் பொதுவாகவே, உலகெங்கும் இதே தத்துவத்தை பலமொழிகளில் கூறியுள்ளனர்.
-------
இதில் குற்றம்,
அரசியல்வாதி மட்டுமல்ல அன்றாட மக்களும்.
ஒருவர் மற்றவரை ஏதோஒருவிதத்தில் துன்புறுத்தி தின்கின்றனர்.
(மிகச்சில நல்லோர்கள் மட்டும் பிறரைத் துன்புறுத்துவதில்லை)
தலை சரியிருந்தால் மட்டுமே வால் சரியாக இருக்கும், ஆதலால்தான், கோட்டை ஆள்பவனை கவிதையில் குறைகூறினேன்.