மை டார்லிங் வாலண்டைன்

சாண்டா கிளாஸ் போல்
தாடி வைத்து பரிசுக்
கடை வீதியை உன் முன்னே
கொண்டு நிறுத்தவா

வானவில்லை பிடித்து வந்து
உனக்கு ஆடை அணிவிக்கவா

எதுகை மோனை எழுத்து சேர்த்து
சிந்தனையில் சந்தங்கள் வைத்து
கவிதை ஒன்று மயில் இறகு
இடையில் வைத்து பரிசளிக்கவா

வானத்து தேவதைகள் போல்
சிறகுடன் வானில் பறந்து
வண்ண மலரிதழ்களை
உன் மேல் தூவவா

என்ன செய்வேன் என்ன பரிசளிப்பேன்
இந்த இனிய நன் நாளிலே
மை டார்லிங் வாலண்டைன்

புன்னகைதான் நீ தரும் பரிசு
என் இதயம்தான் நான் உனக்குத்
தரும் பரிசு

இதயத்தை விஞ்சிய பரிசு
இலக்கியத்திற்கும்
காதலுக்கும் இல்லையடி
இந்த உலகில் என் இனிய காதலியே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Feb-12, 9:56 am)
பார்வை : 254

மேலே