!!! கண்கள் + கண்கள் = கண்கள் !!!

கண்டிப்பாக நான்
நன்றி சொல்லியே
தீரவேண்டும்
என் மீதான உன் காதலை
உனக்கு முன்பே
எனக்கு சொன்ன - உன்
கண்களுக்கு...!!!
காதலுக்கு கண்
இல்லை என்று
யாரோ சொல்லி
கேள்விப்பட்டு இருக்கிறேன்
ஆனால் - என்
காதலுக்கு
பிள்ளையார்சுழி போட்டதே
உன் கண்கள்தான்...!!!
உன்னால மட்டுமே
முடியும்!
ஒரு பார்வையால்
உடைப்பதற்கும்
மறு பார்வையால்
இணைப்பதற்கும்...!!!
உன்னால்
பொய் சொல்லவே
முடிவதில்லை
உன்னமை பேசும்
உன் கண்கள்
இருக்கும்வரை...!!!
உன்னைவிட உன்
கண்களைத்தான் நான்
அதிகம் நேசிக்கிறேன்
ஏனென்றால்
உன் கண்கள்
எதையும் என்னிடம்
மறைக்க
முயற்ச்சிப்பதில்லை...!!!
நீ பார்வை வீசி
சென்றபிறகு - நான்
பாதி பைத்தியமாய்
வீட்டிற்கு வந்தேன்!
யார் கண்ணு பட்டுச்சோ
பிள்ளை இப்படி
ஆயுடானே என்று அம்மா
பூசணிக்காய் கொண்டுவந்து
திருஷ்டி சுற்றி போட்டார்கள்!
பட்டது உன்
கண்தான் என்று
அம்மாவிடம் சொல்லாமல்
அமைதியாய் சிரித்தேன்...!!!
நான் விழித்துக்கொண்டு
இருக்கும்பொழுதே
எனக்கே தெரியாமல்
என் மனதை
திருடும் சாமார்த்தியம்
உன் கண்களுக்கு
மட்டுமே உண்டு...!!!
என்ன அதிசயம்...!
நீ
படிக்கும்பொழுது - உன்
விழிகள் மோதிய
என்
கவிதைகள் கூட
வெட்கப்படுகிறதே...!!!
என்னை
கவர்ந்து சென்றதா?
கடத்தி செயன்றதா?
என்ற
ஆராய்ச்சியின் முடிவில்
எனக்குள்
எஞ்சி இருக்கும்
ஒரே ஒரு மர்மமான பதிவு
உன் கண்கள் மட்டுமே...!!!
எத்தனையோ
விழிகளுக்கிடையில்
என்னை மட்டும்
கவர்ந்து செல்லும் - உன்
விழிகளிடம்
துருவங்கள்
பொய்த்து போகின்றன...!!!
நான் ஒரு
அசைக்கமுடியாத
இரும்பு சக்தி
என்றுதான்
நினைத்துக்கொண்டு இருந்தேன்
உன் காந்தப்புல
கண்களை காணும்வரை...!!!
மின் கடத்தியை பற்றி
படித்திருக்கிறேன் - என்
இதயத்தை கடத்தும் - உன்
கண் கடத்திக்கு
என்னவென்று சொல்வது...???
உன் கண்கள் நிறைய
பொய் சொல்லும்
என்று நீ சொன்னாய் - உன்
கண்களை பார்த்த பிறகுதான்
புரிந்து கொண்டேன்!
பொய் சொல்வதெல்லாம் நீ
பழி சுமப்பதெல்லாம் உன்
கண்களா...???
உன் கண்களை
பார்த்து - நான்
பேசும்போதெல்லாம் - உன்
உதடுகளின் வார்த்தைகள்
வெறும்
உச்சரிப்பாகவே தோன்றுகிறது...!!!
உன் கண்களை
நேருக்கு நேர் நோக்க - என்
கண்களுக்கு
சக்தி இல்லை - ஆம்
மின்னல்கள் அல்லவா
வெட்டுகிறது - நீ
கண்களை
இமைக்கும்பொழுது...!!!
நம் சந்திப்புகளில் - நான்
உண்மை பேசும்பொழுது
உன் கண்களையும்
பொய் பேசும்பொழுது
அதற்கு கீழேயும்
நோக்குவதுண்டு...!!!
தமிழகம் எங்கும்
மின் தட்டுப்பாடு - உன்
பார்வைகள் எட்டும்
தூரத்தில் மட்டுமே
வாழ்ந்துகொண்டிருக்கும்
எனக்கு மட்டும்
இதுவரை
மின் தட்டுபாடு
வந்ததே இல்லை...!!!
உன் வாய்மொழி
இனிமையானது
அதைவிட இனிமையாது - உன்
கண் ஜாடைகள்...!!!
அடிக்கடி
மின் அதிர்வால்
தாக்கப்படுகிறேன் - உன்
உன் மின்சார
மீன்கள் இரண்டால் - நீ
என்னை
நோக்கும்போதெல்லாம்...!!!
சில்லென்று எரிகிறேன்
சுள்லென்று உருகுகிறேன்
எந்த ஒரு
முன்னறிவிப்புமின்றி - நீ
உன் பார்வைகளை
என்மீது வீசும்போதெல்லாம்...!!!
யாப்பு, சொல், அணி, இப்படி
எதுவுமே இல்லாத என்
எழுத்துக்கள் எல்லாம் - உன்
பார்வைகள் பட்ட பிறகுதான்
கவிதைகளாய்
அவதாரம் எடுக்கின்றன...!!!
நீ என்னை
பார்த்துவிட்டு
போன பிறகு உன்னைத்தவிர
வேறு யாரையும்
பார்க்கப்பிடிக்காமல்
பைத்தியமாகி கிடக்கிறேன்...
ஆயிரம் கண்ணுடைய
மாரியம்மனுக்கு கூட
உன் இரண்டு கண்களில்
உள்ள சக்தி
இருக்குமா? என்பது சந்தேகமே...!!!
உன் கண்களை
திறக்கும்பொழுது
பிரம்மனே காதல்
வசப்பட்டிருப்பான்....
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா...???