தொட்டில் சுகம் ....
![](https://eluthu.com/images/loading.gif)
உங்கள் குழந்தையின்
தொட்டிலுக்கருகில்
அமரும் சுகம்
உங்களுக்குத் தெரியுமா?
மூத்திர வாடையும் ...
விசும்பல் சத்தமும் ...
தொட்டிலின் அசைவும்...
தொட்டிலாட்டும் கையின் வலியும் ...
எப்போதுமே சுகம் தான்...!
அந்த கவிதைகளுக்கு
இன்னும் வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை
என்றாலும்
அவைகள் கவிதைகளே ....!
-எபி.