இப்படி எழுதினால்

நானும் எழுத நினைக்கிறன்.
என்ன எழுதுவதென்று முழிக்கிறேன்.

உன்னிடன் கேட்கிறேன் காகிதமே
உன்மேல் இதுவரை
என்ன
என்ன
எழுதப்பட்டன?

வண்ணமிடாமல்
வரையப்படும்
கவிதைகளும்,

உளியில்லாமல்
செதுக்கப்படும்
கதைகளும்,

கையால்
பாடப்படும்
ஓவியங்களும்,

எழுத்தால்
வாழும்
கட்டுரைகளும்,

பொய்களும்
மெய்களும்
இப்படி
எல்லாம்
கண்டவள் நீ!

நீ
பத்தினியா?
ஆம்.
எழுதுகோலால்
மட்டும்தானே
எழுத முடிகிறது.

என்னுடைய தவறுகளால்
உன்னை கசக்கி
உன் கண்களை கசக்கினேனே,

எனக்கு
புடிக்காத போதெல்லாம்
தாறுமாறாய்
அடித்திருக்கிறேனே,

உனக்கு
கோவம் வராதா?
சிரிக்க தெரியாதா?
இல்லை
அழுகவும் முடியாதா?

இதோ
எவ்வளவு
காரணங்கள்
வரிசையாய்..

வாழ்வை அர்ப்பணித்து
வரலாறு கட்டுரைகள்
வரையப்படும் பொழுது,

கைகள் விளையாட
வண்ணங்கள் விதையாகி
ஓவியங்கள் வளரும் பொழுது,

வாழ்விற்காக
வள்ளலாய் மாறி
தேர்வறையில்
சுய சிந்தனைகளும்
நேற்று தயார் செய்த
குறு சிந்தனைகளும்
கலக்கும் பொழுது,

நாடித்துடிப்பு முதல்
நோட்டமிட்டு
புதினம் பூக்கும் பொழுது,

எந்த மொழியென்று
தேடும் அளவுக்கு
இதயத் துடிப்பு
வரைபடம்போல்
மருத்துவர் கிறுக்கும் பொழுது,

தன்னம்பிக்கை இழந்தவனின்
தற்கொலை கடிதத்தின் பொழுது,

அம்மா என சேய்
'அ'வை வரையும் பொழுது,

இல்லை

பிள்ளையார் சுழி,
சிலுவை, நிலா என
சிறுவர்களின் நம்பிக்கை
நகலாகும் பொழுது,

சொல்லிவிடடி பெண்ணே
உன்மனதை படிக்க முடியவில்லை.

அட
அப்பாவி
ஆணே!

எனக்கும் சிரிப்பு வரும்
காதல் கடிதம்
கசக்கப் படும் பொழுது,

எனக்கும் கோவம் வரும்
படைப்பை திருடி
பதிக்கும் பொழுது,

எனக்கும் அழுகை வரும்
இப்படி எழுதினால்
"அன்புள்ள அம்மாவிற்கு"

எழுதியவர் : எழுத தெரியாதவன் (19-Feb-12, 3:07 pm)
பார்வை : 290

மேலே