கர்மவீரா! கலங்காதிரு...............
கர்மவீரா!
காமராஜா!
கவி பாட உன்னை அழைத்தேன்!
நீயே கவிதையாய் மாறிப்போனாய்!
நீ முத்தாக வாழ்ந்திடவில்லை
ஆனால்
தமிழகத்தின் சொத்தாகி
வாழ வைத்தாய்!
நீ உயிர் வாழ்ந்த காலத்தில்
உழவனின் வாழ்வுக்கு
உயிர் கொடுத்தாய் !
கல்விக்கு வாழ்வளித்தாய்
கலங்கரை விளக்கமாய் திகழ்ந்திட்டாய் !
உயிர் கொடுத்த
உன் பெயரை உச்சரித்தே
நாங்கள் உயிர் பெற்றோம் !
நீ கொடுத்த கண்ணையல்லவா!
இன்று
இவர்கள் குத்துகிறார்கள்
நீ
இங்கு வந்து பாரேன் !
அகிம்சையை தூக்கியல்லவா! எறிந்திருப்பாய்!
கர்மவீரா!
கவலைப்படாதே ! கலங்காதிரு!
இதையெல்லாம் சரிசெய்து
உன் காலடியில் சமர்ப்பிக்கிறோம் !