அன்பு

மனிதகுலத்திற்குக் கிடைத்த
மிகப்பெரும் வரம்,
" அன்பு ".....
அரவணைக்க யாரும்
இல்லாமல் போயிருந்தால்,
அனாதையாகவே வாழ்ந்திருப்பேன் ;
அன்னையின் அன்பு
சரியாகக் கிடைத்திருந்தால்,
சீரிய பாதையில் சாதித்திருப்பேன் ;
தந்தையின் அரவணைப்பு
தடையின்றிக் கிடைத்திருந்தால்,
தரணியின் பார்வையை
என்பக்கம் திருப்பியிருப்பேன் ;
ஆனால்,
அன்னை என்னை
அடங்காப்பிடாரி என்றாள் ;
தந்தை என்னைத்
திமிர்பிடித்தவள் என்றார் ;
பாசத்திற்காக ஏங்கும்,
பைத்தியக்காரி நானோ,
அடிபட்டு அனுபவப்பட்டு
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்
உண்மையான அன்பிற்கு
ஏங்கித்தவிக்கிறேன்!!!

எழுதியவர் : Geetha (20-Feb-12, 2:58 pm)
பார்வை : 307

மேலே