நிலாவை அழைத்து
விழி கூடி
காத்திருந்தோம்.
விழி மூட
மறந்திருந்தோம்.
கண்ணுக்கு
காட்சியளிப்பயா?
நெஞ்சுக்குள்ளே
பட்டாம் பூச்சி
நிலவே ஏன்?
கண்ணாம்மூச்சி
பாதி நிலா - வந்தாலே
பரவசம்
அடைந்திருப்பேன்
முழுதாய் மறைந்து
விட்டாயே.
பச்சிலங்குழந்தையும்
பார்க்கதான்
தவிக்கிறதே.
பசியால் அவதியுண்டு
உணவு உண்ண
மறுக்கிறதே!
பருப்பு சாதம்
காத்திருக்க - உனை
மட்டும் காணவில்லையே!
பசி பொறுக்க
மாட்டான் - என்
மைந்தன்
நெஞ்சமெல்லாம்
பதறுகிறதே!
வஞ்சனை செய்து
விட்டாய் - வந்து
கொஞ்சம் முகம்
காட்டேன்.
வான் திரையெங்கும்
நட்சத்திரம்.
மைந்தன் உன்னை தான்
கூப்பிடுறான்.
கவலைகளும்
நிறைஞ்சு போச்சு!
நிலவே வந்து விடு
காட்சி தந்து விடு...