நீ உறங்கும் போது உன்னை இவர்கள் ரசித்தால்.............?
என்னவளே
நீ உறங்குகையில் உன் தாய் உன்னை ரசித்தால்
அள்ளி கொஞ்சி இருப்பாள்
உன் தந்தை ரசித்தால் அவர் தாயை
உன்னில் கண்டிருப்பார்
உன் தோழி உன்னை ரசித்தால்
பொறாமை கொண்டிருப்பாள்
காதலனாய் நான் ரசித்தால்
உன் உறக்கம் கலைதிருப்பேன்
ஒரு கவியாய் ரசித்தால்
வெறும் கவிதையில் மட்டும் வர்ணிக்கிறேன்
நீ உறங்கும் அழகை