கனவு தேவதை பகுதி 3

எத்தனை யோசித்தும் நடக்காத எத்தனையோ

நம் வாழ்வில் இருந்தும்

தனிதுவும் தருகிறோம் நம் காதலுக்கு மட்டும்

உயிரை அறியாமல் அடகு வைக்கிறோம்

முழு விருப்பத்துடன்

நானும் அப்படிதான் அடகு வைத்தேன்

என் கனவு தேவதையின் காதல் மீது

வருவாளோ என்பது விதியானது

ஏனோ என் வருத்தங்கள் தாங்கும் தோள்களாக

அவள் காதல் எனக்கு பழகி போனது

அவள் அறிவுரை எனக்கு தெம்பானது

ஏனோ மனம் அறியாமல் அவளை தினம்

தேடுது எனக்கு மட்டும்தான் சாத்தியம்

ஒரு கனவை பலமுறை காண்பது

காதலிக்க நேசிக்க சுவாசிக்க

களையும் போது வருத்த பட்டு

வெறுக்கிறேன் எனது தூக்கத்தையும்

உறங்காமல் கனவு காண முடிந்தால்

அது முடியாமல் தொடர்ந்தால்

சொர்கத்தை கண்ணில் கண்டவன் நான்

அவளுக்கும் அப்படிதான் இருக்கும்

காதல் புதிது அவளுக்கு எனக்கு அவள்

காதல் மட்டுமே புதிது இருந்தும் நேசிக்கும்

அவளை தானாய் என் மனது





இன்னும் தொடரும் தேவதையின் லீலைகள்

எழுதியவர் : ருத்ரன் (20-Feb-12, 6:39 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 206

மேலே