[89] பாம்பணையை விட்டெழுந்து வாரும்..!

நித்தம்நித்தம் இலவயங்கள்
நேர்வருமோ என்றேங்கிப்
புத்துணர்ச்சி நீர்குடித்துப்
புரள், எங்கள் துயர்களையச்
சொத்துபல ஒளித்துவைத்துச்
சுகமாகத் தூங்குகின்ற
பத்மனாபச் சாமிகளே!
பாம்பணையை விட்டேழுமே!

கல்வியாம் ஞானக்
கண்ணடைக்கும் பள்ளிகளே!
கொல்விடப் போதைக்
குடிதிறக்கும் குடியரசே!
நில்!எனாது ஏறி
நிலவிருக்கும் போருள்விலையே!
சொல்லொணாச் செல்வச்
சொத்து,எதற்கோ சுரர்,அரசே!

முத்துரத்னப் பவளநகை
மூட்டைகளைப் பின்மறைத்துப்
பத்தெதுவும் (பற்று எதுவும் ) அற்றவர்போல்
படுத்துறக்கம் கொள்பவரே!
சொத்தழித்துச் சுதர்(மகர்)களுக்குச்
சுடர்கல்வி தரவென்று
நித்தம்,நித்தம் அலைகின்ற
நிலைக்கிரங்கி உதவிடுமே!

அடுக்கியபல் லாயிரத்தில்
அலங்கார நகைபலவும்
மடக்கி,உமது அங்கணத்துள்
மறைத்துறக்கம் செய்பவரே!
உடுக்கை,இழந்து ஓலமிட்டே
'ஓங்காரம்' பயில்விக்க
நடுத்தெரு,நா ரணர்,ஆனோம் !
நலிவெமது தீருமைய்யா !

பாத்தா யிரங்கோடி
பலலட்சம் என்றெல்லாம்
சொத்து,நீர் மறைத்துள்ள
சொற்கேட்டு,எம் அரசியலார்
பித்தாட்டம் விடப்போமோ?
பிறகெங்கன் துயர்களைவோம்!
பத்திவிட்டுப் (பக்திவிட்டு) போவோமோ?
பயங்களைய எழுமைய்யா !
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Feb-12, 7:08 pm)
பார்வை : 253

மேலே